இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது.. வீடியோ

0
139

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேப் பகுதியில் முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது. இதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை உடனடியாக விடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியினைத் தாக்கியுள்ள இந்த சுனாமியினால் ஏற்ப்பட்ட உயிர்சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை.

LEAVE A REPLY