“கபாடி வீரர் விளையாட்டு” திடலிலேயே உயிர் பிரிந்தது

0
69

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே
வெண்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 2 நாட்களாக கபாடி போட்டி நடந்து வருகிறது. 21.09.2018 மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெண்குளம், இராமநாதபுரம் பெரியார் நகர் அணிகள் மோதின. வெண்குளம் அணியில் விளையாடிய கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா 21. திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக வீரர்கள் துரிதமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது. இது குறித்து உத்தரகோசமங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால் இந்த கபாடி போட்டி நடக்கும் இடத்தில் எந்த விதமான முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்றவை நடக்கும் விளையாட்டு திடலில் காவல் துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதா..! இல்லை அனுமதி அளித்து இருந்தால் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டு இருந்தால் இந்த உயிர் பிரிந்தது தடுக்கப்பட்டு இருக்க கூடும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இனிமேலும் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் துறையினர் உரிய முறையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்கினால் நன்று..!

LEAVE A REPLY