செப்டம்பர் 3ம் தேதி தெரியும்

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் டிவிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்உத்தரவுப்படி சிபிஐ நீதிமன்றம் மீண்டும் விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வசந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோர்  ஆஜராயினர்.

தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட மற்ற 5 பேரும் தேவைப்படும் போது நேரில் ஆஜராகவும், மற்ற நேரங்களில் நேரில் ஆஜராக விலக்களிக்க  கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு சிபிஐ  எதிர்ப்பு தெரிவித்தது.  அரசு தரப்பு சாட்சிகளிடம் வரும் 4 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக் கூறி,  வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சி.பி.ஐ. பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் 4-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நடைபெறவுள்ளதால்,  அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 3-ஆம் தேதி சி.பி.ஐ. பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY