பெருமாள் முருகனுக்கு புதிய பதவி

0
81

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்தவர். தமிழ் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் பெற்றோர் பெருமாள்- பெருமாயி. இவர் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எழுதி வருகிறார். இவர் எழுதிய மாதொரு பாகன் என்னும் புத்தகம் பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வதேச எழுத்தாளர் அமைப்பான பென் இன்டர்நேஷனல் துணைத் தலைவராக பெருமாள் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைப்பின் உலகளாவிய மாநாடு தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் முருகன், கென்ய எழுத்தாளர் கூகி வாதியாங்கோ, ஆங்கில எழுத்தாளர் நயன்தாரா சேகல் ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடு்க்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY