14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி தப்புமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த ஆசிய கோப்பை போட்டி 14வது போட்டியாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக 1984, 1995 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2016ஆம் ஆண்டு நடந்த தொடரில் இந்தியா கோப்பையை வென்றது.

LEAVE A REPLY