1690 – ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
1769 – ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான்.
1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது.
1840 – இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1874 – யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது.
1919 – நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி ருமேனியாவைத் தாக்கியது.
1942 – அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் அவையை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கைதிகள் 100 பேரை ஜப்பான் கொன்றது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது.
1949 – ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1950 – சீனா திபெத் மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
1951 – மலேயத் தீவிரவாதிகள் பிரித்தானிய தூதுவர் சேர் ஹென்றி கேர்னி என்பவரைக் கொன்றனர்.
1951 – இஸ்ரேலிய அரசு டேவிட் பென்-கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது.
1958 – பாகிஸ்தான் அதிபர் இஸ்காண்டர் மிர்சா ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன் ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தார்.
1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
1962 – சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது.
1963 – எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றை சூறாவளி ஃபுளோரா தாக்கியதில் 7,190 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது.

இன்று பிறந்தவர்கள்

1931 – டெஸ்மண்ட் டூட்டு, தென்னாபிரிக்க ஆயர், நோபல் பரிசு பெற்றவர்
1935 – தாமஸ் கெநீலி, ஆஸ்திரேலிய எழுத்தாளர்
1952 – விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர்
1978 – ஜாகீர் கான் , இந்திய வேகபந்து வீச்சாளர்.

இறப்புகள்

1708 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (பி. 1666)
1967 – நோர்மன் ஏஞ்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
1974 – சி. மு. இராசமாணிக்கம், முன்னாள் இலங்கை எம்பி
1984 – அப்துல் காதர் லெப்பை, ஈழத்துக் கவிஞர் (பி. 1913)
1994 – நீல்ஸ் காஜ் ஜேர்ன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

LEAVE A REPLY