வரலாற்றில் இன்று

87

314 – ரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.

1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1895 – கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.

1918 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய ராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.

1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.

1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.

1970 – வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.

1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.

2006- காஷ்மீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாகிஸ்த்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.

2016 – மேத்யூ சூறாவளியால் தாக்கி 900 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY