விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்தில் இஸ்ரோ தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவான ரூ.10 ஆயிரம் கோடிக்கு  மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தில், 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். இது குறித்து இன்று பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2021 டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம். இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டம். 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதங்கள் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணிற்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்படும். பயிற்சி குழுவில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெற உள்ளனர் என்றார்.

LEAVE A REPLY