திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள எம்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா( 28). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முத்துச் செல்வன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். குடும்பத்தை காப்பாற்றி வந்த கணவரை இழந்து பிரியா 3 குழந்தைகளுடன் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். குழந்தைகளை இனி எப்படி காப்பாற்றுவேன். நானும் கணவருடன் செல்லப் போகிறேன் என்று அவர் புலம்பியபடி இருந்திருக்கிறார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கணவரின் உடலை அடக்கம் செய்த மயானத்திற்கு சென்ற பிரியா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அங்கு யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் உடல் கருகி இறந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை கண்டு அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் உடலை பார்த்து 3 சிறுவர்களும் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் மனதை கலங்க வைத்தது.

LEAVE A REPLY