வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்  அருகேயுள்ள மிலாக் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகள் தவுரலா (3). இச்சிறுமி அங்குள்ள சாலையில சிலர் பட்டாசு வெடிப்பதை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து ‘சுட்லி’ என்ற வகை பட்டாசை சிறுமியிவ் வாயில் வைத்து வெடித்துள்ளார். இதனால் சிறுமிக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, சிறுமியின் தந்தை சசிகுமார் சிறுமியை அருகேயுள் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுமியின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டது.

எனினும், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை சசிகுமார் மீரட் நகர போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹர்பாலை தேடி வருகின்றனர். ஹர்பால் தலைமறைவாக இருப்பதால், போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY