3 டியில் ராமாயணம்… மீண்டும் சீதையாக நயன்தாரா!

121

இதுவரை ராமாயணம் குறித்த பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது முழுக்க முழுக்க 3டியில் உருவாக உள்ளது ராமாயணம். இந்த படத்தை இந்தி தங்கல் பட இயக்குனர் நிதிஷ் திவாரி, ‘மாம்’ பட இயக்குனர் ரவி உத்யவார இணைந்து இயக்க உள்ளனர். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த்  தயாரிக்கிறார். 3 பாகங்கள் ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகிறது. 

சீதையாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். சீதை வேடத்தில்  நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

LEAVE A REPLY