சிபிசிஐடி போலீஸ் காவலில் 4 நாட்கள் திருநாவுக்கரசு

60
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், அவா் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில் திருநாவுக்கரசுவை பொள்ளாச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், அவரை நேரில் அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் அவரை காணொலி காட்சி மூலம் நேரலையில் ஆஜா்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பில் கோாிக்கை விடுக்கப்பட்டது.  இதை ஏற்றுக்கொண்ட நடுவா் நீதிமன்றம், திருநாவுக்கரசுவிடம் சுமாா் 40 நிமிடங்களுக்கும் மேலாக காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியது.  அப்போது திருநாவுக்கரசுவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி 4 நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் திருநாவுக்கரசுவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனா்.

LEAVE A REPLY