உடல் எடையை குறைக்கும் 5 காய்கறிகள்!

323

பொதுவாகவே  உடல் எடை அதிகரிப்பு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் உணவு, உடற்பயிற்சி போன்றவற்றால் எடையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடல்  எடையை குறைக்க உதவும் 5 காய்கள் குறித்து காண்போம்!

பூசணிக்காய்: நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது. பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

 பாகற்காய்: சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் உதவுகிறது. சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கும்.

புடலங்காய்: எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

பீர்க்கங்காய்: இரத்தத்தை சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது. தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

சுரைக்காய்: ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி.உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY