பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் சென்று அங்கு ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். 2014ஆம் ஆண்டு பிரதமரான பிறகு ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். 2014ஆம் ஆண்டு அவர் சியாச்சின் மலைச் சிகரத்திற்கும், 2015ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்திற்கும் சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். 2017ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார். இந்த ஆண்டு  கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத் சென்றிருந்தார்.

தீபாவளியையொட்டி அங்குள்ள சிவன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அருகேயுள்ள பனி சூழ்ந்த குகைக்குச் சென்று தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் ராணுவ முகாமுக்குச் சென்று அங்கு ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அங்கு 5000க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு பிரதமருக்காக கூடியிருந்தனர். அவர்களிடையே பேசிய பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சில ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார்.

LEAVE A REPLY