நடிகைகளில் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சிலர் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களெல்லாம் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு நடிகை முதல் படத்திலேயே  7 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
 
பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா என்ற நடிகை. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இப்படம் இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்கு ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
 
இப்படத்தில் நடித்திருக்கும் பிரபாசும் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் பட விற்பனையில் பங்கு என்ற வகையில் ரிலீசுக்கு முன் ரூ.100 கோடியை தன் பங்காக பெறுகிறாராம்.

LEAVE A REPLY