திருச்சி அருகே ஊருக்குள் நுழைந்த 7 அடி நீளம் பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் ஓலையூர் கிராமத்திற்குள் இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. கிராம மக்கள் திடீரென பீதி அடைந்தனர். இளைஞர்கள் அதை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் வனத்துறைக்கு  தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி சரக வனவர் பழனிச்சாமி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று மலைப்பாம்பை மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அதை பாதுகாப்பாக கூண்டுக்குள் அடைத்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர் . ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததால் கிராம மக்கள் திடீரென பீதி அடைந்தனர்.

LEAVE A REPLY