கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர்  திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 11.25 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ் மணியன், துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பி வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அமைச்சர்களோடு 5 மாவட்டங்களின் கலெக்டர்களும் வந்திருந்தனர். திறப்பு நிகழ்ச்சி போட்டோவுக்கு போஸ் கொடுக்க 7 விவிஐபிக்களும் முண்டியடித்ததால் கலெக்டர்களும், விவசாய பிரதிநிதிகளும் ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் செயல்பாட்டால் பத்திரிக்கையாளர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. 

LEAVE A REPLY