ஓவரின் 7 வது பந்தில் அவுட் கொடுத்த நடுவர்

0
120

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பிக்பாஷ் லீக் டி20 போட்டி நடந்து வருகிறது. பெர்த் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியும், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி 177 ரன்கள் சேர்த்தது. இதன்பின் பெர்ஸ் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர்கள் பான்கிராப்ட், மைக்கேல் கிளிங்கர் களமிறங்கினர். 2-வது ஓவரில் 6 பந்துகள் வீசப்பட்ட நிலையில் 7-வது பந்தும் வீசப்பட்டது. அந்தப் பந்தை கிளிங்கர் தூக்கி அடிக்க கேட்ச்சானது. 

ஆனால் கேட்ச் பிடிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் 3வது நடுவருக்கு கள நடுவர் பரிந்துரை செய்தார். கேட்சை ஆய்வு செய்த 3வது நடுவர் கேட்ச்தான் என்று அறிவித்தார். ஆனால், ஏற்கெனவே ஓவர் முடிந்து விட்டதை அறியாமல் கள நடுவர் இவ்வாறு அவுட் கொடுத்து விட்டார். அவரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துவிட்டு கிளிங்கர் அதிர்ச்சியுடன் வெளியேறினார். இருப்பினும் இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணி தோல்வி அடைந்திருந்தால் நடுவரின் முடிவு விவாதமாகியிருக்கும்.

LEAVE A REPLY