விசாரணை நிறைவு..மருத்துவ விடுப்பில் சென்றார் அபிநந்தன்

32

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாக்.கின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பிப். 27ல் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். போர் விமானத்தை போர் விமானத்தில் துரத்திச் சென்று இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாக். ராணுவத்திடம் சிக்கினர். 3 நாட்களுக்கு பின் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாக். ராணுவத்தினர் அவரை நடத்திய விதம் குறித்தும் அங்கு நடந்தவை குறித்தும் விமானப் படை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாக். ராணுவம் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாக அபிநந்தன் தெரிவித்தார். அவரிடம் நடந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.பின்னர் அபிநந்தனின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டு அவர் எப்போது பணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்படும்’ என விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY