பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதலில் புகார் அளித்த பெண்ணின் பெயர்மற்றும் உறவினர்கள் பெயர்கள் சிபிஐக்கு வழக்கை மாற்றியதற்கான தமிழக அரசின் அரசாணையில் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்த வழக்கில் 4 பேர் தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று எஸ்பி பாண்டியராஜ் பேட்டியளித்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் வழக்கில் 4 பேர்தான் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறிய எஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY