தன்னை பற்றியோ தனது அலுவலகத்தை பற்றியோ  எதிர்த்து செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் நிருபர்களை பிஆர்ஓ ஓரங்கட்டுகிறார் என்கின்றனர்  பிரஸ்காரர்கள். சமீபத்தில் சென்னை தினமலரில் அந்த ‘வெங்காய மாவட்ட’ பிஆர்ஓ அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரின் தகிடுதத்தம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக சம்மந்தப்பட்ட நிருபருக்கு மாவட்ட அரசு செய்திகள் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நிருபர்களுக்கான இமெயில் குரூப்பில் இருந்து நிருபரின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டதற்கு சென்னையில் இருந்து வரும் பத்திரிக்கைக்கு நாங்கள் ஏன் செய்தி கொடுக்க வேண்டும் என பதில் அளிக்கப்பட்டது. தற்போது பிஆர்ஓவின் பணி குறித்து விமர்சனம் செய்து மீண்டும் சென்னை தினமலரில் செய்தி வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதன் எதிரொலியாக பிஆர்ஓ சார்பில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து சம்மந்தப்பட்ட நிருபர் நீக்கப்பட்டுள்ளார். நிருபர் அவர் வேலைய பாக்குறதுக்கு அதிகாரி செய்யுற வேலைய பாருங்கனு கேக்குறாங்க.. பிரஸ்காரங்க.. 

LEAVE A REPLY