கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் ஆக்ஸைட் வாயுவை அதிக அளவில் வெளியேற்றியுள்ள நாடுகள் பட்டியலை  கார்பன் ப்ராஜட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலில் மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் சீனா (27 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா (15), ஐரோப்பிய யூனியன் (10 ), இந்தியா (7 சதவீதம்) என அடுத்தடுத்த இடம் பெற்றுள்ளன. 

சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.  தற்போது, உலகில் 41 சதவீதமாக உள்ள காற்றுமாசு, 2018 ம் ஆண்டில் மேலும் 1.8 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 ம் ஆண்டில் இந்தியாவின் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு 6.3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எரிபொருட்களால் இந்த மாசு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி (7.1 சதவீதம் ) ஆயில் (2.90) கியாஸ் (6 சதவீதம்) என காற்று மாசடைவது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY