காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. நேற்று பக்ரீத் பண்டிகைக்காக கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜீத்தோவல் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகரில் தேசியகொடி ஏற்றுகிறார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் செல்லும் முதல் மத்திய அமைச்சர் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜம்மு, லடாக் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றே அமித்ஷா காஷ்மீர் செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY