அனிருத்திற்கு மாறும் ஷங்கர்…

84

இயக்குனர் ஷங்கர் – கமல் இணைந்த கூட்டணியில் வெளியான வெற்றிப் படம் ‘இந்தியன். இந்தப் படம் வெளியாகி தற்போது 22 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப் படம் மக்களின் மனதை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு ஷங்கர்& கமல் இணையவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஷங்கருடன் இணைவதை கமலஹாசன் உறுதிப்படுத்தினார்.

ரஜினியுடன் இணைந்த 2.0 படத்தை முடித்த ஷங்கர் இந்தியன் 2 படத்துக்கான பனிகளில் மும்முரமாகி உள்ளார். கடந்த 14 ஆம் தேதி பூஜை உடன் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்குப் பின் கமலுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்அனிருத்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY