இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் மாதம்  22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க்ஃஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

இதற்காக ராணுவத்தின் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 8 ஆம் தேதி அட்மிட் கார்டு ஆன்லைனில் வெளியாகும். முகாமுக்கு வரும்போது அட்மிட் கார்டு மற்றும் ஆவணங்களை எடுத்துவர வேண்டும். பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

ஆவணப் பரிசோதனை நாள் மற்றும் நேரம், உடற்தகுதித் தேர்வு, உடல் அளவீடு செய்வதற்கான நாள் ஆகியவை குறித்து அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். மருத்துவப் பரிசோதனை, ஆகஸ்ட் 23ஆம் தேதி நடக்கும். அக்டோபர் 1,2019 தேதியில் 18 வயதுக்குக் குறைவாக இருப்பவர்களும் இதில் பங்கேற்கலாம். ஆனால், பெற்றோரின் ஒப்புதல் சான்றிதழுடன் வரவேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் உண்டு. 

LEAVE A REPLY