நிறைய சிலைகள் போலி?

0
81

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூன்றாவது முறையாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும் இக்கோவிலில் மிகவும் பழமையான சிலைகள் இருந்து வருகிறது இதில் பல சிலைகள் மாயமானதாக வந்த தகவலை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு செய்தார் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது

இந்நிலையில் இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் மற்றும் தொல்லியல் துறை இணை இயக்குனர் நம்பிராஜன் உள்பட 20-க்கும் மேற்பட்ட குழுவினர் கடந்த இரண்டு மணி நேரமாக பெரிய பெரிய கோவில் பிரகார மண்டபத்தில் சோதனை செய்து வருகின்றனர் இந்த சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது அதாவது பல தொன்மையான சிலைகளுக்குப் பதிலாக புதிய சிலைகள் இருப்பதாகவும் பழமையான சிலைகளில் தற்காலத் தமிழ் எழுத்து வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் சிலை மாற்றப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது இதையடுத்து அனைத்து சிலைகளையும் காவல்துறையினர் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இவற்றில் பல போலியாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY