சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர்- இந்திரா ஜெய்சிங் தம்பதி. இவர்கள் லாயர்ஸ் கலெக்டிவ்” என்ற என்.ஜி.ஓ. அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. இந்த பணத்தை இவர்கள் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. மேலும் 2009 -14 கால கட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த புகார்கள் பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று சிபிஐ. அதிகாரிகள்  குழு அதிரடியாக வக்கீல்கள் வீடு, அலுவலகங்கள், டெல்லி, மும்பையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியது. இதற்கிடையே  வக்கீல் தம்பதிகள் தங்கள் மீதான வெளிநாட்டு பண மோசடி குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY