நாசா விண்வெளி வீரர்கள் ஸ்காட் மற்றும் மார்க் . இவர்கள் இரட்டையர்கள். அவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இந்த நிலையில் இருவரில் ஒருவரான ஸ்காட் விண்வெளிக்கும் அவரது இரட்டையரான மார்க் பூமியிலும் தங்க வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஸ்கேட் கெல்லி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சுமார் ஓர் ஆண்டு ஆய்வு செய்துவிட்டு தற்போது பூமிக்கு திரும்பியிருக்கிறார்.  இந்நிலையில் விண்வெளிக்கு சென்று திரும்பிய ஸ்கேட் கெல்லி, பூமியில் உள்ள தனது சகோதரரிடமிருந்து வேறுபட்டுள்ளார் என்பது ஆய்வில் இருந்து தெரிய வந்திருக்கிறது. 

 தற்போது இந்த ஆய்வு குறித்த முடிவு அறிக்கை வெளியாகியுள்ளது. விண்வெளியில் இருந்து திரும்பி வந்த ஸ்காட்டின் உடலில் ஒருசில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்காட் உடலில்  டி.என்.ஏவும் மாறியுள்ளது. ஸ்காட் விண்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கியுள்ளார். அமெரிக்கர் ஒருவர் இவ்வளவு அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியது இதுவே முதல் முறை.

விண்வெளியில், கதிர்வீச்சு , உடல் எடை குறைவு, கட்டுப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தூக்க சுழற்சியில் மாற்றம் ஆகியவைகளால் அவரது உடம்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இனி அவர்கள் இரட்டையர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY