குழந்தைகள் விரும்பும் சிக்கன் கோலா உருண்டை குழம்பு!

439
Spread the love

விடுமுறை நாட்களில் வித்தியாசமான சமையல் செய்ய வேண்டும் என்று குடும்பத்தார் எதிர்பார்க்கின்றனர் என்று புலம்பும் இல்லத்தரசிகள் சிக்கன் கோலா உருண்டை செய்து அசத்தலாம்!

தேவையான பொருட்கள் :  தேங்காய் துருவல்-3 ஸ்பூன், சோம்பு -1 டீஸ்பூன், கசகசா -1 டீஸ்பூன், பூண்டு, இஞ்சி-சிறிது அளவு. எலும்பு இல்லாத சிக்கன், வெங்காயம் 1. பச்சை மிளகாய் -3, மிளகு -1 ஸ்பூன், பொட்டுக் கடலை -2 ஸ்பூன்,தக்காளி, உப்பு -தேவையான அளவு.

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காய் துருவல்,சோம்பு ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள் ,மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு கொதித்தா பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.இப்போது சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

LEAVE A REPLY