இலங்கையில் கடந்த ஈஸ்டரன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான  விஜேதாச ராஜபக்சே எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக  யாரும் விவாதிக்க முன்வரவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் எச்சரித்தன. அரசியல் மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அம்பாந்தோட்டை உள்ளதால் சீனாவை தொடர்ந்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இங்கு கால்பதிக்க முயற்சி செய்கிறது’ என்றார்.

LEAVE A REPLY