சிதம்பரம் பூமிக்கு பாரம்…வறுத்தெடுத்த எடப்பாடி!

211

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து நடக்கிறது. பாஜக அரசு கொண்டு வரும் மசோதாக்களை படித்துகூட பார்க்காமல் ஆதரவு தருகிறது. தமிழக அரசை கலைத்தால் கூட கண்டு கொள்ளாமல் ஆதரவு தருவார்கள் போல என்று சாடியிருந்தார். 

இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர்  திறக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி; முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது. அவர் பூமிக்குத்தான் பாரம். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்த்தாரா. மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு நிதி ஒதுக்கினாரா? தமிழ்நாட்டை சுற்றி பார்த்திருக்கிறாரா? அவருக்கு அவரது சுயநலன்தான் முக்கியம் என்றார். முதல்வரின் இந்த கடும் விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் சிதம்பரம் ஆசியாவில் சிறந்த நிதியமைச்சர் என்று விருது பெற்ற சிதம்பரத்தை முதல்வர் இவ்வாறு விமர்சித்திருப்பது அவரது பதவிக்கு அழகல்ல என்றார்.

LEAVE A REPLY