தலைமை நீதிபதி மீதான புகாரில் சதியா? விசாரணை குழு அமைப்பு

96
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்தார். மேலும் இந்த குற்றச்சாட்டால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பின் பெரிய சக்திகள் உள்ளன என்று தெரிவித்தார்.
 
இதற்கிடையே பாலியல் வழக்கில் தலைமை நீதிபதியை சிக்கவைக்க சதி நடப்பதாக வக்கீல் உத்சவ் பெய்ன்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ.1½ கோடி வரை தருவதாக சிலர் முயன்றுள்ளனர் என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும்  என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்தது. இந்த குழு
 ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தும். இக்குழுவுக்கு  சி.பி.ஐ., உளவுத்துறை, டெல்லி போலீசார்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY