காஷ்மீர் விவகாரம்… அரசுக்கு கோர்ட் முழு ஆதரவு!

97

ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, செல்போன், இன்டர்நெட், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடைகளை நீக்க கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்டோகி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதி புர்கான்வானி சுட்டுக் கொல்லப்பட்டபோது அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்த நிலையை சுட்டிக் காட்டப்பட்டது. தற்போது  அங்கு   சட்டம்-ஒழுங்கை முதலில் சீரமைக்க வேண்டியுள்ளது. இதற்காகதான் அரசு சில தடைகளை விதித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் உணர்ச்சிமயமானது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப சற்று அவகாசம் அளித்தாக வேண்டும். இதனால் தடையை  உடனடியாக நீக்க முடியாது என்றனர். மேலும் உயிர்கள் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று  குறிப்பிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY