போதை மாணவர்கள்.. காமராஜர் நினைவிடத்தை சுத்தபடுத்த கோர்ட் உத்தரவு

67

மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு புதுவித தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அன்யை தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் 8 பேர் போதையில் வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை. தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சம்மந்தப்பட்ட 8 மாணவர்களும் நூதன தண்டனையை வழங்கியுள்ளது. 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY