இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 2022 ஆம் ஆண்டு  காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு முன், 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இதில், தென்னாப்பிரிக்கா  தங்கம், ஆஸ்திரேலியா வெள்ளி, நியூசிலாந்து வெண்கலப் பதக்கமும் வென்றன.

இந்நிலையில் 2022 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படுவதாக காமன்வெல்த் விளையாட்டுச் சங்கமும், ஐசிசியும் இன்று அறிவித்துள்ளன. இந்த காமன்வெல்த் தொடர் 2022 ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், எட்டு சர்வதேச அணிகள் கலந்து கொள்கின்றன. காமன்வெல்த் தொடரில் நடைபெறவுள்ள 8 கிரிக்கெட் போட்டிகளும் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பல முக்கிய ஆட்டங்கள் இந்த மைதானத்தில் தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY