ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும், பெண்கள் குறித்த தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா ”நான் அந்த நிகழ்ச்சியில் பேசியது தவறு தான். அதற்கு வருத்தம் தெரிவிப்பதோடு மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ-யிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார். மேலும் பயிற்சியாளர் மற்றும் மற்ற அணி வீரர்களிடமும் இந்த சம்பவத்தை விளக்கி மன்னிப்பு கோரியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், “இந்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் இரு வீரர்களுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY