பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபிஐ கடந்த 5 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே குற்றவாளிகள் 5 பேரும் சேலம் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர். 

இந்நிலையில் அவர்கள் சிறைக்குள் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சிறைக்காவலர்கள் சிலர் கூறியதாவது, இந்த 5 பேரும் உயர் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மிகவும் சோகமாக இருந்தனர். 3 நாட்களுக்கு முன் திடீரென அவர்கள் 5 பேரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கில் சிக்கியதற்கு நீதான் காரணம் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். 

இது பின்னர் கைகலப்பாக மாறியது. சபரிராஜனை மற்ற 4 பேரும் தாக்கி எல்லா குற்றங்களுக்கும் காரணம் நீ தான் காரணம் என்று கோர்ட்டில் ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் சண்டையை விலக்கிவிட்ட காவலர்கள் சபரி ராஜனை மட்டும் தனி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது.

LEAVE A REPLY