தேவையான பொருட்கள் :
சிக்கன் விங்ஸ்-5 to 6 துண்டுகள்
சோளமாவு-2 cup
சோயா சாஸ்-2tsp
தக்காளி சாஸ்-2 tsp
சில்லி சாஸ் -2tsp
மஸ்டட் சாஸ்-1tsp
கார்ன் சிரப்/ரைஸ் சிரப் -2tsp
பழுப்பு சர்க்கரை -2 tsp
வினிகர்-1tsp
பூண்டு -2 பல்
எண்ணெய்
மிளகு
உப்பு

செய்முறை;

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து,உப்பு மிளகு சேர்த்து விரவி வைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சோளமாவை எடுத்து இதில் விரவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக விரவ வேண்டும் சோளமாவு சிக்கன் துண்டுகளுடன் நன்றாக ஒட்டும்படி விரவி கொள்ளவும். பிறகு ஓரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சுடானதும் சிக்கனை போட்டு பத்து நிமிடம் நன்றாக பொறித்து எடுக்க வேண்டும்.தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு பொறித்த சிக்கன் துண்டுகளை மீண்டும் 5 நிமிடம் அதே எண்ணெய்யில் பொறிக்க வேண்டும் ( double fry). பிறகு சாஸ் தயார் செய்ய வேண்டும் ஓரு பேனில் எண்ணெய் ஊற்றி சுடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு அனைத்து சாஸ்களையும் சேர்க்கவும், நன்றாக கிளறி நல்ல திக்கானதும் கார்ன் சிரப் பழுப்பு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சாஸ் தயார். கடைசியாக பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சாஸ் உடன் சேர்த்து நன்றாக விரவி விட்டு ஓரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY