ஹேமில்டனில் நியூசிலாந்து -இந்திய அணிகளிடையே கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு இந்திய ரசிகர் போலீஸ் பாதுகாப்பை மீறி கையில் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்துக்குள் ஓடி வந்தார். அவரை விரட்டிக் கொண்டு பாதுகாவலர்கள் வந்தனர். அந்த ரசிகர், கையில் தேசியக் கொடியுடன் தோனியின் காலில் விழுந்தார். அப்போது, அந்த ரசிகர் தேசியக் கொடியை தோனியின் காலடியில் வைத்துவிட்டு விழ முயன்றார்.