சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பியதை உண்ண முடியாமல் அவதிப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை. இதற்காக மருந்து மாத்திரைகளை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியே இதில் நல்ல பயன் பெறலாம்.
 
இதில் சிலவற்றை பார்க்கலாம்:
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து , மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 
 
உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தும், தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டு வருவதாலும் இதை கட்டுப்படுத்தலாம்.
 
நார்ச்சத்து அடங்கிய உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட்டால்தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள்ளவும்.  தினமும் இரண்டு முறை பால் குடிப்பதும் நல்லது. 
அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும்.
 

LEAVE A REPLY