திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே இருந்த அறிஞர் அண்ணாவின் சிலையும் சீரமைக்கப்பட்டு அன்றே திறக்கப்படுகிறது. இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
 
 
பாஜ, அதிமுக தவிர சோனியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கும் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி விழாவில் பங்கேற்க கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY