வேண்டாம் தோனி…இசைக்குயில் உருக்கம்

206
உலக கோப்பை போட்டிக்குப்பின் தோனி ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி சமீபகாலமாக உலா வருகிறது. இந்நிலையில் நேற்றைய அரையிறுதியில் இந்திய அணி தோற்றது. இதன்பின் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ​​தோனி ஓய்வு குறித்த செய்திகள் வருகின்றன. இதுகுறித்து தோனி உங்களிடம் அல்லது அணி குழுவினரிடம் சொல்லியிருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு கோலி ‘இல்லை, அவர் இதுவரை ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை’ என்றார்.
 
இந்நிலையில், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்  தனது டுவிட்டர் பக்கத்தில், ” வணக்கம் டோனி, சில நாட்களாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்று. தயவு செய்து ஓய்வு பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நாட்டுக்கு உங்களின் அர்ப்பணிப்பு ரொம்ப முக்கியம். உங்களிடம் என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம்” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
 
.Namaskar M S Dhoni ji.Aaj kal main sun rahi hun ke Aap retire hona chahte hain.Kripaya aap aisa mat sochiye.Desh ko aap ke khel ki zaroorat hai aur ye meri bhi request hai ki Retirement ka vichar bhi aap mann mein mat laayiye.@msdhoni
 

 

LEAVE A REPLY