திருச்சி லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுகரசர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக டாக்டர் இளங்கோவன், அமமுக வேட்பாளராக சாருபாலா ஆகியோர் களத்தில் உள்ளனர். பிரச்சாரத்தை முதலில் ஆரம்பித்தவர் சாருபாலா தான். அதன் பின்னர் இளங்கோவன் அடுத்தாக திருநாவுகரசர் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கினர். ஆனால் கூட்டணி பலத்தில் திருநாவுகரசர் பரபரப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதற்கு அடுத்தபடியாக இளங்கோவன் மற்றும் சாருபாலா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரச்சாரம் நாளை முடியும் நிலையில் 3 வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் திருச்சி தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுகரசர் முந்தி செல்வது போல் தெரிவதாகவும், அடுத்ததாக  இளங்கோவனுக்கும் மூன்றாவது இடம் சாருபாலா என்பதே தற்போதைய நிலை என உளவுத்துறை கடைசி நேர சர்வேயை நடத்தி முடித்திருக்கிறது. 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY