எடப்பாடி கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறார்…கே.எஸ். அழகிரி சாடல்!

68

அதிமுக குறித்து ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இன்று மேட்டூரில் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சிதம்பரம் நாட்டுக்கு என்ன செய்தார். அவர் பூமிக்கு பாரம் என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை; ப.சிதம்பரம் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை நாடு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. 

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

 

Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY