பதவி போனது போனதுதான்… பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் அதிரடி

167

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜீமங்கலம் என்ற ஊரில் 1998ம் ஆண்டு பாஜக சார்பில் மறியல் நடந்தது. இதில் போலீஸ் ஜீப், பைக்,3 டிரக்ஸ் தீயிட்டு கொளுத்தப்பட்டது, அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள்  கோவிந்த ரெட்டி,பாலகிருஷ்ணரெட்டி உள்பட 108 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில், பாலகிருஷ்ண ரெட்டி 94-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 7 ம் தேதி தீர்ப்பளித்த எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வரும் தனிகோர்ட் நீதிபதி சாந்தி அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.இதையடுத்து பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணாரெட்டி மேல்முறையீடு செய்தார்.  இந்த மனு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் 20 ஆண்டு பழைய வழக்கால் பாதிக்கப்பட்டுள்ளேன்.முதல் எப்ஐஆரில் எனது பெயர் இல்லை.எரிப்பு, தாக்குதலில் ஈடுபடாத, வேடிக்கை பார்த்தவரை எப்படி தண்டிக்க முடியும்? தீர்ப்பு வந்ததும் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் மீது நேரடி குற்றச்சாட்டு ஏதும் இல்லை? என்று பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் வாதிடப்பட்டது. காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வக்கீல், பாலகிருஷ்ண ரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை என்றார். அப்போது  நீதிபதி, ‘பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு தவறு என்று கூறுவீர்களா? அரசு வக்கீல் காவல்துறை தரப்புக்காகத்தான் வாதாட வேண்டும். வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது. தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்’ என அறிவுறுத்தினார். இதையடுத்து பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அதன்பின் மாலை 7.45 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY