முல்லை வேந்தன் நீக்கம் இதனால் தான்..

270

தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக திமுகவில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. திமுகவின் இந்த அவசர நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்றால் உள்குத்து தான் என்கின்றனர். தருமபுரியை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகியான முல்லைவேந்தன், திமுக சார்பில் 1989, 1996 மற்றும் 2016ஆம் ஆண்டு மொரப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சராகவும் வலம் வந்தார். எனினும், அதன் பின் தேமுதிகவுக்கு தாவினார். சிறிது காலத்தில் அங்கு ஏற்பட்ட அதிருப்தியில் ஒதுங்கி இருந்தவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைமையே அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டது. அவ்வப்போது கொள்கையை மாற்றிக்கொள்பவர் என்பதால் திமுக நிர்வாகிகள் அவருடன் நெருங்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் அன்புமணி ராமதாஸை முல்லை வேந்தன் சந்தித்ததாக தகவல் வெளியாகியது. குறிப்பாக பண கஷ்டத்தில் இருந்த அவரை பாமக சமயம் பார்த்து அணுகியதாகவும் கூறப்பட்டது. இந்த விபரம் தெரிந்தவுடன் திமுக தலைவர் காலதாமதம் வேண்டாம் என நடவடிக்கை எடுத்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். 

 

 

LEAVE A REPLY