யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணி: Armed Guard, காலியிடங்கள்: 100, சம்பளம்: மாதம் ரூ.9,560- 18,545. வயது வரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.uionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் https://www.unionbankofindia.co.in/pdf/COMMON-NOTIFICATION-AG-RECRUITMENT-4.pdf என்ற லிங்கில் அறியலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பிக்க கடைசி தேதி: 18.02.2019.

 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY