சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் திவாகர். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் காசிமேடு பகுதியில், மீன் வியாபாரம் செய்து வருகிறேன். அய்யனார் என்பவரிடம், மீன் கொள்முதல் செய்வதற்காக, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தேன்.  அவர் கூறியபடி, எனக்கு மீன்களை வழங்கவில்லை. இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, அய்யனார் கொடுத்த புகாரில், மீன்பிடி துறைமுக போலீசார் என்னை அழைத்து, அடித்து சித்ரவதை செய்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., அக்பர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, நான்கு வாரத்தில், 50 ஆயிரம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.’அந்த தொகையை, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., அக்பர் ஆகியோரின் சம்பளத்தில் இருந்து, பிடித்தம் செய்து கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.

 

LEAVE A REPLY