A shop attendant carries a tray of gold necklaces at a jewellery story in Singapore September 18, 2008. Gold reversed earlier gains to fall below $860 per ounce on Thursday, down about 0.4 percent from the previous day, as buying ran out of steam. It had earlier risen by more than 3 percent to $892.10, extending its biggest ever one-day rise in absolute dollar terms on Wednesday, when buyers flocked to the precious metal as a safe haven asset, and as a hedge against falling stocks. REUTERS/Vivek Prakash (SINGAPORE)

நாட்டின் சுதந்திரத்திற்கு முன் அதாவது 1942ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 44 ரூபாயாக இருந்தது. 1967 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 102 ரூபாய்க்கு உயர்ந்தது. 1996 ஆம் ஆண்டு 5 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம், 1998ஆம் ஆண்டு சரிந்து 4 ஆயிரமானது.  2008ஆம் ஆண்டு ஒரு பவுன் 12,500 ரூபாயாக இருந்த தங்கம் தற்போது 30  ஆயிரத்தை தொடவுள்ளது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது சிறிது சிறிதாக குறைந்து 2019 ஆகஸ்ட் மாதத்தில் 19 மாதங்களில் இல்லாத குறைந்த விலையாக இருக்கும் என்று வல்லுனர்கள் மற்றும் பஞ்சாங்க கணிப்பிலும் தெரிய வந்துள்ளது.

 1990ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளை தொட்டது. இது 2007ல் 15000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. கடந்த  ஜனவரியில் சென்செக்ஸ் 35000 தொட்டது. 2018 ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை, மாறாக நஷ்டமே ஏற்பட்டது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். பஞ்சாங்கத்தின் கணிப்பும் அப்படித்தான் உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை விலை சீராக உயரும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.  44000 புள்ளிகளைத் தொடும் என்று மோர்கன் ஸ்டேன்லி அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY