மேகதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், ஆளுநர் பர்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார். கர்நாடக அரசு தயாரித்த மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடா்ந்து வரைவு திட்டத்தை தயாரித்த கா்நாடகா நீா்வளத்துறை அமைச்சா் சிவக்குமாா், காவிாி மேலாண்மை ஆணையத் தலைவா் மசூத் ஹூசைன் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.  இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க நேற்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில் கா்நாடகா அரசு அணை கட்டுவதற்கு எதிராக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லிக்கு செல்கிறார். அவர் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. 

அப்போது மேகதாது அணை விவகாரம் குறித்தும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் குறித்தும் பிரதமரிடம் ஆளுநர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் கவர்னர் இன்று மாலையே சென்னை திரும்புகிறார். 

LEAVE A REPLY